Saturday, April 21, 2018

பிரான்ஸ் வழங்கிய கௌரவ விருதை திருப்பிக் கொடுத்த சிரியா !


சிரிய அதிபர் பஷார் அல் அஸாதுக்கு வழங்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் உயரிய கௌரவ விருதான Légion d'honneur விருதை சிரியா பிரான்ஸிடமே திருப்பிக் கொடுத்து விட்டது.
அமெரிக்காவிற்கு அடிமையாக இருக்கும் ஒரு நாடு வழங்கிய விருதை தான் அணியப்போவதில்லை என்று அஸாத் கூறிவிட்டதாகக் கூறி அந்த விருது திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்குமுன் ஒரு ஒழுங்கு நடவடிக்கையாக சிரிய அதிபர் பஷார் அல் அஸாதுக்கு வழங்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் உயரிய கௌரவ விருது திரும்பப் பெறப்படும் என்று பிரான்ஸ் அறிவித்திருந்தது.
இதையடுத்து டமாஸ்கஸிலுள்ள ரோமேனிய தூதரகத்தின் மூலம் அந்த விருது பிரான்ஸுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.

சிரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “அதிபர் அஸாதுக்கு வழங்கப்பட்ட Légion d'honneur விருதை வெளியுறவு அமைச்சகம் பிரெஞ்சுக் குடியரசிடமே திருப்பி அளித்து விட்டது, தீவிரவாதிகளை ஆதரிக்கும் அமெரிக்காவின் அடிமை நாடு வழங்கிய விருதை அணிவது அதிபருக்கு அவமானம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தனது தந்தையின் மறைவுக்குப் பின் பதவியேற்ற பஷார் அல் அஸாத் சிரியாவில் அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையின்பேரில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதற்குமுன் முன்னாள் பனாமா அதிபரான மனுவேல் நொரியேகாவிடமிருந்து இந்த விருது பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


http://news.lankasri.com/france/03/176936?ref=ls_d_france

No comments:

Post a Comment