Saturday, April 21, 2018

10,000 அகதிகளை ஏற்றுக்கொள்கிறது ஜேர்மன்


ஐரோப்பிய மீள்குடியேற்றத்தின் ஒரு பகுதியாக ஜேர்மன் தன் பங்குக்கு 10000 அகதிகளை அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கடந்த கோடையிலிருந்து பாதிக்கப்பட்ட அகதிகளை மீள் குடியேற்றத்திற்காக பாதுகாப்பான நேரடி வழியில் ஐரோப்பாவிற்கு வர அனுமதித்து வருகிறது.
ஒட்டுமொத்தமாக, ஐரோப்பிய ஒன்றியமானது, வட ஆப்பிரிக்காவிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றுக் கொள்கிறது.
இதில் இணைந்துள்ள ஜெர்மன் 2019 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்திலிருந்து 10000 அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க உள்ளது.
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து வரும் அகதிகளை மட்டும் அனுமதிக்கப் போவதாக ஜேர்மன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய குடியேற்ற ஆணையர் Dimitris Avramopoulos, ஜேர்மன் அரசாங்கம் அதன் சர்வதேச ஒற்றுமையை காட்டும் விதமாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.
எனினும் ஜேர்மன் அமைப்பான Pro Asyl-ன் தலைமை நிர்வாக அதிகாரி Günter Burkhardt, ஜேர்மன் குறைவான எண்ணிக்கையில் அகதிகளை அனுமதிக்கும் அதே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் லிபியாவின் சித்ரவதைக் கூடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி சமீபத்தில் மே மாதத்தின் இறுதி காலத்திற்குள் ஆஸ்திரிய எல்லையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்தும் என்று அறிவித்தது.
ஆனால் அகதிகள் நெருக்கடி அதிகரித்திருக்கும் வேளையில், ஜேர்மனியின் எல்லைகளை விரிவுபடுத்தும் முடிவை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் விரும்பவில்லை.
செனகன் பகுதியில் நிரந்தர எல்லை கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு பெரிய பின்னடைவாகும் என ஐரோப்பிய ஒன்றிய குடியேற்ற ஆணையாளர் Avramopoulos எச்சரித்திருக்கும் நிலையில் இன்று பிற்பகல் ஜேர்மன் உள்துறை மந்திரி Horst Seehofer சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/germany/03/176927?ref=ls_d_germany

No comments:

Post a Comment