Tuesday, February 20, 2018

வெளிநாட்டில் இலங்கையர் மீது கொடூர இனவெறி தாக்குதல்


அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியின் வீதியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த தாக்குதலுக்குள்ளான பெடி என்பவர் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவரே குறித்த இலங்கையரை உதைக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் மேற்கொண்ட நபரிடம் இருந்து பெடி விலகி சென்ற போதிலும் குறித்த நபர் தொடர்ந்து உதைப்பதனை வீடியோவில் அவதானிக்க முடிந்துள்ளது.
இதன் போது தனது நண்பர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்கின்றார் என குறித்த இலங்கையர் எச்சரித்துள்ளார்.
எனினும் குறித்த நியூசிலாந்து நாட்டவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய அவரை தொடர்ந்து உதைத்துள்ளார்.
இவ்வாறான இனவெறி தாக்குதல் நடந்தால் நாங்கள் எப்படி இந்த நாட்டில் வாழ்வது? எப்படி எனது குடும்பத்தை பார்த்து கொள்வது? சாரதியான எனது இந்த உழைப்பை தான் எனது குடும்பம் நம்பியிருக்கின்றது. இவ்வாறான அச்சுறுத்தும் சம்பவங்கள் நடந்தால் எப்படி வாழ்வது? என பெடி ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினால் எனது காலில் வருத்தம் ஏற்பட்டது. சில வாரங்கள் என்னால் நடக்க முடியாமல் போனது. தற்போது அவுஸ்திரேலிய மக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் பெடியின் காலில் பாதிப்பு ஏற்பட்டதனை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த சம்பவத்திற்கு தொடர்புடைய 21 வயதான சந்தேக நபரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


http://www.tamilwin.com/community/01/174850?ref=home-top-trending

No comments:

Post a Comment