Monday, December 11, 2017

Wi-Fi இணைப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உபகரணம் கண்டுபிடிப்பு

வயர்லெஸ் தொழில்நுட்பம் எனப்படும் Wi-Fi இணைப்புக்களை ஏற்படுத்துவதற்கு இலத்திரனியல் சாதனங்கள் அவசியமாகும்.
ஆனால் முப்பரிமாண பிரிண்ட் முறையில் பெறப்பட்ட பிளாஸ்டிக்கினை மட்டுமே பயன்படுத்தி பெறப்பட்ட உபகரணம் ஒன்றின் ஊடாக Wi-Fi இணைப்பு ஏற்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மின்கலங்களோ அல்லது வேறு விதமான இலத்திரனியல் சாதனங்களின் உதவியோ தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே வடிவமைத்துள்ளனர்.
பிளாஸ்டிக் பற்சில்லு, ஸ்பிறிங், பிளாஸ்டிக் சுவிட்ஜ் மற்றும் உணரி என்பவற்றினைப் பயன்படுத்தியே இச் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக வயர்லெஸ் முறையில் கணினி போன்ற உபகரணங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் உபகரணத்தின் செயற்பாடு தொடர்பான விளக்கத்தினை வீடியோவினூடு தெரிந்துகொள்ள முடியும்.



http://news.lankasri.com/othertech/03/167184

No comments:

Post a Comment