Monday, October 16, 2017

உங்கள் பேஸ்புக் ஹேக் செய்யப்படலாம்: எனவே கண்டிப்பாக இதை செய்யுங்க


முன்னொரு காலத்தில் நாட்குறிப்பு எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்த மக்கள் இன்று பேஸ்புக்கில் தமது அன்றாட செயற்பாடுகளை பதிவேற்றி வருகின்றனர்.
உறவினர்களை இணைக்கும் இத் தளம் சில சமயங்களில் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படவும் காரணமாக அமைந்துவிடுகின்றது.
இதில் ஹேக் செய்யப்பட்டு தரவுகள் திருடப்படுவதும் ஒன்றாக காணப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் களவாடப்படும் முக்கிய தரவுகளை மீட்பது கடினமாகும்.



எனவே முற்கூட்டியே அனைத்து தரவுகளையும் தரவிறக்கம் செய்து வைப்பது சிறந்ததாகும்.
இதற்காக Download Archive எனும் வசதி பேஸ்புக்கில் தரப்பட்டுள்ளது.
இதன் ஊடாக புகைப்படங்கள், சட் செய்யப்பட்ட தரவுகள் உட்பட அனைத்து தரவுகளையும் தரவிறக்கம் செய்து பின்னர் புதிய பேஸ்புக் கணக்கில் பயன்படுத்த முடியும்.
http://news.lankasri.com/internet/03/134639

No comments:

Post a Comment