Saturday, May 20, 2017

பாகுபலியின் குறியீடுகள்!


திரிசூலம் இந்திய புராணங்களில் அதிகம் காணப்படும் குறியீடு. இந்திய வேதங்கள் இதன் குணங்கள் என சத்விகா, ராஜசிகா மற்றும் தமசிகா என கூறுகின்றனர். இதில் தமசிகா என்பதன் தரம் சமநிலையின்மை, குழப்பம், பதட்டம் என கூறப்படுகின்றன. இது பின்கலத்தேவனுக்கு சரியாக பொருந்தும்.
சிவகாமியின் நெற்றியில் முழு நிலவு இருக்கும். இது சமத்துவம், தைரியம், அக்கறை மற்றும் சக்தியை வெளிப்படுத்தும் குறியீடு. இவை, இவரது கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தும்.
இவரது நெற்றியில் பாதி நிலவு குறியீடு இருக்கும். இது பல மதங்களில் பின்பற்றப்படும், காணப்படும் குறியீடாக இருந்து வருகிறது. இது இறக்கம், சமத்துவம், சமநிலை, இலகுவான் மென்மையான குணம் போன்றவற்றை குறிக்கிறது.
தன்னை தானே தேவசேனாவை காக்கும், மீட்கும் கருவியாக தயார்ப்படுத்தி கொள்ளும் அவதிகாவின் குணத்தை குறிக்கிறது இந்த வேல் கம்பு குறியீடு.
மாஹிழ் ம தி சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமான அடிமை கட்டப்பா. சிம்மாசனத்தில் இருப்பவரின் கட்டளைகளை நிறைவேற்றுவதே இவரது வேலை. அவரது நெற்றியில் இருக்கும் குறியீடு விசுவாசம் மற்றும் உதவியற்ற நிலையை குறிக்கிறது. 
தேவசேனாவின் கதாபாத்திரம் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் சமநிலை காணும்படி அமைத்திருப்பார்கள். தேவசேனாவின் நெற்றியில் இருக்கும் குறியீடு ஆண், பெண் சமநிலையை குறிக்கிறது.
பாகுபலியின் வில்லன் பல்லாலதேவா. மாற்றமே காணாத நட்சத்திரம் சூரியன். எத்தனை ஆண்டுகள் ஆனாலுன் தன்னிலை மாறாமல் இருக்கும். இது பல்லாலதேவனின் குணத்தை குறிக்கிறது.
சிவடு மற்றும் அவந்திகாவின் தோள்பட்டையில் இருக்கும் இருவேறு குறியீடுகள் ஒன்றினையும் போது, ஈருடல் ஓருயிர் ஆனதை குறிக்கும் காதல் குறியீடாகும்.

சிவடு சிவ பக்தன். சிவனுக்கு உரிய குறியீடுகள் பாம்பும், சங்கும். மேலும், கதை எழுதும் போது சிவடு பாத்திரத்திற்கு நந்தி என பெயர் வைக்கலாம் எனவும் யோசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment