Wednesday, August 24, 2016

இலங்கை மாணவனுக்கு பிரித்தானியாவில் 22 மாத சிறை

பிரித்தானியாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் இடம் பெற்ற நிதி மோசடி தொடர்பில் இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவன் குறித்த நிறுவனத்தில் இருந்து 2 இலட்சம் பவுண்ஸ் நிதியை மோசடி செய்யவதற்கு உதவிய குற்றச்சாட்டிலேயே இவருக்கும் இந்தியர் ஒருவருக்கும் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் 22 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த சுவாமிநாதன்(50) என்ற இந்தியர் தற்போது பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்றும் greengrocerலில் தொழில் புரிகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக கற்கை நெறிகளுக்காகவே பிரித்தானியாவிற்கு வத்தே(27) என்ற இலங்கை மாணவன் வருகைதந்ததாகவும், விசா காலாவதியான பின்னரும் அவர் பிரித்தானியாவில் தங்கியிருந்ததார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தண்டனை காலம் நிறைவடைந்த பின் உடனடியாக அவரை நாடு கடத்த உள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் குறித்த மாணவன் மீதான குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment